ஆப்ரேஷன் சிந்தூரில் நம் விதியை நாமே தீர்மானித்தோம் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
1965ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் போரின் முன்னாள் வீரர்களுடன் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய அவர், இந்தியா தனது அண்டை நாடுகளுடனான உறவுகளில் அதிர்ஷ்டசாலியாக இருந்ததில்லை என்றும், ஆனால் அதை நாம் விதியாக ஏற்றுக்கொள்ளவில்லை, நமது விதியை நாம் தீர்மானித்தோம், அதற்கு ஒரு உதாரணம் ஆப்ரேஷன் சிந்தூர் எனக்கூறினார்.
மேலும்,பஹல்காமின் கொடூரமான நிகழ்வுகளை நினைவுகூரும் போதெல்லாம், இதயம் கனமாவதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.