மதுரையில் 23 பேரின் பணி நீக்க உத்தரவை ரத்து செய்யக்கோரி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாநகராட்சிக்குச் சொந்தமான தளவாட பொருட்களை சேதப்படுத்தியதாக 23 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்து அவர்லேண்ட் நிறுவனம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையின் பேரில் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.