ஹிமாச்சல பிரதேசத்தில் இறந்த கணவரின் உடலை எடுத்துச் சென்ற போது, கார் ஆற்றில் கவிழ்ந்து மனைவியும், மகனும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசத்தின் காசாவில் ஓய்வுபெற்ற தொகுதி மேம்பாட்டு அதிகாரியான செரிங் நம்கியால் என்பவர் சமீபத்தில் உடல்நலக்குறைவால் காலமானார்.
இந்நிலையில் அவரது உடலைச் சொந்த ஊருக்கு எடுத்துச் செல்வதற்காகக் காரில் ஏற்றிக் கொண்டு அவரது மனைவி சுனித் டோல்மாவும், மகன் டான்கேவும் புறப்பட்டனர்.
அப்போது கட்டுப்பாட்டை இழந்த அவர்களது கார், சட்லஜ் ஆற்றில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டது.
கடந்த 15ம் தேதி இந்தச் சம்பவம் நடந்த நிலையில், கார் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அவர்களது உடல் இதுவரை கிடைக்கவில்லை எனக் கூறப்படுகிறது.