தேனி அருகே மேகமலை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதை தொடர்ந்து சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேனி மாவட்டத்தில் மேற்குதொடர்ச்சி மலைப்பகுதிகளில் விட்டு விட்டு மழைப் பெய்தது. இதனால் கோம்பைதொழு அருகே வனப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியில் திடீரென நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனையடுத்து அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் பாதுகாப்பாக வெளியேற்றினர்.
மேலும், நீர்வரத்து சீராகும் வரை சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.