டெல்லியில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரு பள்ளி குழந்தைகள் ரயில் மோதி பரிதாபமான உயிரிழந்தனர்.
நங்லோயில் ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்ற இரண்டு பள்ளி குழந்தைகள் எதிர்பாராத விதமாக ரயில் மோதி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்தில் பொதுமக்கள் குவிந்ததால் பரபரப்பான சூழல் நிலவியது. அங்கு வந்த போலீசார் உயிரிழந்த குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கான மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
போலீசாரின் நடவடிக்கையை தொடர்ந்து மக்கள் கூட்டம் கலைந்து சென்றதால் ரயில் சேவைகள் சீரானது.