கிட்னி விற்பனை முறைகேடு வழக்கை விசாரிக்கச் சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.
கிட்னி விற்பனை முறைகேடு விவகாரத்தில் தமிழக அரசின் செயல்பாடு அதிருப்தியளிப்பதாகக் கூறிய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, தென்மண்டல ஐஜி பிரேம் ஆனந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு விசாரணைக் குழுவை நியமித்துக் கடந்த ஆகஸ்ட் மாதம் உத்தரவிட்டது.
முதற்கட்ட விசாரணை அறிக்கையை வரும் செப்டம்பர் 24ம் தேதிக்குள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் கூறியிருந்தனர்.
இந்நிலையில் இந்த உத்தரவுக்கு எதிராகத் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.