தனியார் மற்றும் கிக் பணியாளர்களுக்கான தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் தனியார் துறையினரை கவரும் வகையில் பல்வேறு மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் அக்டோபர் 1ம் தேதி முதல் பல புதிய விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன.
அதன்படி, ஒருவர் 60 வயதில் ஓய்வு பெறும்போது, மொத்த சேமிப்பில் இருந்து எடுக்கக்கூடிய தொகை, 60 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மீதி 20 சதவீதத்திற்கு மட்டும் மாதாமாதம் ஓய்வூதியம் தரும் ஆன்யுட்டி திட்டங்களில் சேர வேண்டும்.
திட்டத்தில் இருக்கும்போது, அவசரத் தேவைகளுக்காகப் பணம் எடுப்பதற்கான வரம்பு, மூன்று முறை என்பதில் இருந்து ஆறு முறையாக உயர்த்தப்பட்டுள்ளது. ஓய்வூதிய சேமிப்புக் கணக்கைக் காண்பித்து, நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், திட்டத்தில் சேருவதற்கான அதிகபட்ச வயது 70ல் இருந்து 75ஆக உயர்த்தப்பட்டதுடன், வெளியேறும் வயது 75ல் இருந்து 85ஆக மாற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றிப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்கான 75 சதவீதக் கட்டுப்பாடு நீக்கப்பட்டு, 100 சதவீதம் வரை முதலீடு செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறை பணியாளர்கள் 15 ஆண்டுகள் சேமிப்புக்குப் பிறகு திட்டத்திலிருந்து வெளியேறலாம் என்ற புதிய வாய்ப்பும் தற்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்களில் வழங்கப்பட்டுள்ளது.