குஜராத்தில் 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
குஜராத் மாநிலம் பாவ் நகரில் முடிவுற்ற திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்கும், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும் பிரதமர் மோடி வருகை தந்தார். தொடர்ந்து அவர், 34 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை மக்கள் பயன்பாட்டிற்காக அர்ப்பணித்தார்.
முன்னதாகப் பாவ் நகரில் பிரதமர் மோடி வாகனப் பேரணியில் ஈடுபட்டார். அப்போது வழிநெடுகிலும் பல்லாயிரக்கணக்கானோர்த் திரண்டு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைப் படமாக வரைந்து சிறுவன், அதனை அவருக்குப் பரிசளித்தார். அந்த ஓவியத்தைப் பிரதமர் மோடி பெற்றுக் கொண்டதால் உணர்ச்சிவசப்பட்டுச் சிறுவன் கண் கலங்கினார்.