ஜெய்ப்பூரில் இருந்து திருப்பதிக்கு சென்ற பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் இருந்து திருப்பதிக்கு 60 பேருடன் பேருந்து ஒன்று திருப்பதி நோக்கி சென்று கொண்டிருந்தது.
பிராங்கிபுரத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிர்பாராத விதமாகச் சாலையோர வயல் வெளியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 பேர் காயமடைந்தனர்.
அவர்களில் இருவரது நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாகக் கூறப்படுகிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.