உலகில் இந்தியாவிற்குப் பெரிய எதிரிகள் யாரும் இல்லை எனப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் பாவ் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியா மிக வேகமாக முன்னேறி வருவதாகத் தெரிவித்தார்.
உலகில் இந்தியாவிற்கு எந்தப் பெரிய எதிரியும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், மற்ற நாடுகளைச் சார்ந்திருப்பது தான் பெரிய பிரச்னை என்றும்,
இதனைத் தன்னம்பிக்கையால் நாம் தோற்கடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 140 கோடி மக்களின் எதிர்காலத்தை மற்றவர்களிடம் விட்டுவிட முடியாது எனக் கூறிய அவர், பாரத நாட்டின் திறன்களைக் காங்கிரஸ் புறக்கணித்து விட்டதாகக் குற்றம் சாட்டினார்.
மேலும் நாட்டின் வளர்ச்சியைக் காங்கிரஸ் கட்சி தடுத்துவிட்டதாகவும் பிரதமர் மோடி விமர்சித்தார்.
















