மக்களின் உண்மையான பிரச்னைகளை பற்றி நன்கு தெரிந்தவரையே சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்க வேண்டுமென வாக்காளர்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் தீப்பெட்டி தொழிலாளர்களின் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், தீப்பெட்டி தொழிலின் வளர்ச்சிக்குப் பெண்கள்தான் அச்சாணி எனப் பெருமிதம் தெரிவித்தார்.
தென் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு மத்திய அரசு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பதாகவும் பட்டாசு மற்றும் தீப்பெட்டித் தொழிலை மேம்படுத்த தேவையான திட்டங்களை மாநில அரசு வகுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும் இத்தகையைத் திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு அனைத்து உதவிகளை செய்யும் எனவும் நிர்மலா சீதாராமன் உறுதியளித்தார்.