இந்திய சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில் மும்பையில் சர்வதேச கப்பல் முனையத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் வகையில், குரூஸ் பாரத் மிஷனின் கீழ் 556 கோடி ரூபாய் செலவில் இந்தியாவின் மிகப்பெரிய சர்வதேச கப்பல் முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குஜராத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற பிரதமர் மோடி, மும்பைச் சர்வதேச கப்பல் முனையத்தைக் காணொலி காட்சி வாயிலாகத் தொடங்கி வைத்தார்.
சுமார் 4 லட்சத்து 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்தக் கப்பல் முனையத்தின் மூலம், ஆண்டுதோறும் 10 லட்சம் பயணிகளைக் கையாளவும், ஒரே நேரத்தில் 5 கப்பல்களைக் கையாளவும் முடியும். இதன் மூலம் இந்திய கப்பல் சுற்றுலாத் துறை மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.