H1-B விசா கட்டண உயர்வால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
அமெரிக்காவில் எச்-1பி விசாக்களுக்கான வருடாந்திர விண்ணப்பக் கட்டணத்தை ஒரு லட்சம் டாலராக உயர்த்தி அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இதற்கு பதில் அளித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இதனால் ஏற்படும் தாக்கம் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது.
இந்தியா மற்றும் அமெரிக்காவிலுள்ள நிபுணர்களுடன் இது குறித்து கலந்தாலோசிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நடவடிக்கையானது, மனிதாபிமான அடிப்படையில் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்றும், இந்த இடையூறுகளை நிவர்த்தி செய்ய தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.