பிரதமர் மோடி இன்று மாலை 5 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார்.
சுதந்திர தின உரையின்போது தீபாவளி பரிசாக ஜிஎஸ்டி விதிகளில் திருத்தம் செய்யப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் நான்கு அடுக்குகளாக இருந்த ஜிஎஸ்டி வரி 2 அடுக்குகளாக மாற்றப்பட்டன.
மேலும், ஜிஎஸ்டி வரி குறைப்பு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி, 12 மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டடுக்கு ஜிஎஸ்டி நடைமுறை நாளை முதல் அமலுக்கு வருகிறது.
இந்நிலையில், பிரதமர் மோடி இன்று (செப் 21) மாலை நாட்டு மக்கள் மத்தியில் நேரலையில் உரையாற்றுகிறார். அப்போது ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்தும், இதனால் மக்களுக்கு கிடைக்கும் பலன் குறித்தும் பிரதமர் மோடி பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.