சாத்தனூர் அணையில் இருந்து 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் அணைக்கு வரும் 3 ஆயிரம் கனஅடி தண்ணீர், திருக்கோவிலூர் அணைக்கட்டு பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
இதனால் துறிஞ்சலாறு, மலட்டாறு, ராகவன் கால்வாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், திருக்கோவிலூர் பகுதியில் உள்ள தென்பெண்ணை ஆற்றங்கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.