ஜிஎஸ்டி சீர் திருத்தத்தால் விலை குறையும் பொருட்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.
ஹேர் ஆயில், ஷாம்பு, டூத் பேஸ்ட், டூத் பிரஸ், குளியல் சோப், ஷேவிங் க்ரீம் ஆகிய பொருட்களுக்கு 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
நொறுக்குத்தீணிகள், வெண்ணெய், நெய், சீஸ் மற்றும் பால் பொருட்களின் ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
பால் புட்டிகள், குழந்தைகளுக்கான டயப்பர்கள் மற்றும் கிளினிக்கல் டயப்பர்களுக்கும் ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சமையல் பாத்திரங்கள், தையல் மிஷின்கள் மற்றும் அதன் உதிரிபாகங்களுக்கும் ஜிஎஸ்டி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மின்னணு பொருட்களில் 28 சதவீதமாக இருந்த ஏர் கன்டிஷனர்-களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
32 இன்சுக்கு மேல் உள்ள எல்இடி, எல்சிடி டீவிகளுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மானிட்டர்கள் மற்றும் புரொஜக்டர்களுக்கு 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல் சமையல் பாத்திரங்களை கழுவும் இயந்திரத்திற்கும் ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ மொபைல் துறையில், ஆயிரத்து 200 சி.சி.-க்கும் குறைவான திறன் கொண்ட பெட்ரோல், எல்பிஜி, சிஎன்ஜி கார்களுக்கு ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
28 சதவீதமாக இருந்த ஆயிரத்து 500 சிசிக்கு குறைவான டீசல் மற்றும் டீசல் ஹைப்ரிட் கார்களுக்கான ஜிஎஸ்டி 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மூன்று சக்கர வாகனங்கள், 350 சிசிக்கு குறைவான இருசக்கர வாகனங்களுக்கு 18 சதவீதமாக ஜிஎஸ்டி குறைக்கப்பட்டுள்ளது.
சரக்குகளை எடுத்து செல்லும் மோட்டார் வாகனங்களுக்கும் ஜிஎஸ்டி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.