இந்தியா-அமெரிக்கா இடையேயான வர்த்தக ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழு இன்று அமெரிக்கா செல்கிறது.
கடந்த 16ஆம் தேதி அமெரிக்க பிரதிநிதிகள் குழு இந்தியா வந்திருந்தது. இரு நாடுகள் இடையே வா்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வது தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து இந்திய அதிகாரிகளுடன் அக்குழு ஆலோசனை நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக, மத்திய வர்த்தக துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையிலான குழுவினர் இன்று அமெரிக்கா செல்லவுள்ளனர். 50 சதவீத வரிவிதிப்பு, H-1B விசா கட்டண உயர்வு உள்ளிட்டவை குறித்து அவர்கள் அமெரிக்க அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.