பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பதாக இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்துள்ளன.
பாலஸ்தீனத்தை இதுவரை 140க்கும் மேற்பட்ட நாடுகள் தனி நாடாக அங்கீகரித்துள்ளன. மற்ற நாடுகளும் தங்களை அங்கீகரிக்க வேண்டும் என பாலஸ்தீனம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தது.
இருந்தபோதும், அமெரிக்கா, இஸ்ரேல் போன்ற நாடுகள் பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கவில்லை. இந்நிலையில், இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா ஆகிய 3 நாடுகள் தற்போது பாலஸ்தீனத்தை தனி நாடாக ஏற்றுக்கொண்டுள்ளன.
ஆனால், இந்த முடிவை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது. பயங்கரவாதத்திற்கு வழங்கப்படும் மிக அபத்தமான பரிசு எனவும் கருத்து தெரிவித்துள்ளது.