நடிகர் மோகன்லால் நடிக்கும் திரிஷ்யம் – 3 படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் நடிகர் மோகன்லால் நடிப்பில் திரில்லர் வகையில் உருவான ‘திரிஷ்யம்’ , ‘திரிஷ்யம் 2’ ஆகிய படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றிப் பெற்றன.
ஹிந்தி, சீன மொழிகளிலும் இப்படம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. இந்நிலையில் திரிஷ்யம் 3-ஆம் பாகத்திற்கான படப்பிடிப்பு நாளை கேரளத்தின் தொடுபுழாவில் துவங்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதில், மோகன்லால் மற்றும் மீனா உள்ளிட்டோருக்கான காட்சிகள் எடுக்கப்பட உள்ளதாகத் தெரிகிறது.