மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் அரசுப்பேருந்தின் கண்ணாடியை உடைத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
உசிலம்பட்டியில் பி.கே.மூக்கையா தேவருக்கு மணி மண்டபம் அமைப்பதற்காக அப்பகுதியில் உள்ள கள்ளர் சமூக மாணவர்களின் விடுதி கட்டடம் அரசு சார்பில் இடிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் மாணவர் சங்கத்தினர் மற்றும் பார்வர்டு பிளாக் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
அப்போது அவ்வழியாக வந்த பேருந்தின் கண்ணாடியை நேதாஜி என்பவர் சேதப்படுத்தினார்.இதுதொடர்பாக நேதாஜியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.