திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உலக அமைதி தினத்தை முன்னிட்டு 2 ஆயிரத்து 950 மாணவர்கள் சமாதான புறா வடிவில் நின்று சாதனை படைத்தனர்.
திருப்பூர் ரோட்டரி மற்றும் ரோட்டரேக்ட் சங்கங்கள் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்வில், 37 கல்லூரிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
மேலும், உலக அமைதியின் அவசியத்தை வலியுறுத்தி வெள்ளை நிற புறாக்களையும் அவர்கள் பறக்க விட்டனர்.
இந்த நிகழ்வை இந்தியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ், எலைட் புக் ஆப் ரெக்கார்ட்ஸ் உள்ளிட்ட அமைப்புகள் அங்கீகரித்துச் சான்றிதழ் வழங்கின.