ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் நடித்துள்ள ஆண்பாவம் பொல்லாதது படம் அக்டோபர் 31ம் தேதி வெளியாவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஜோ திரைப்படம் மக்களிடையே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
இதை தொடர்ந்து ரியோ ராஜ் – மாளவிகா மனோஜ் மீண்டும் இணைந்து நடிக்கும் ஆண் பாவம் பொல்லாது படத்தை அறிமுக இயக்குநர் கலையரசன் தங்கவேல் இயக்கி உள்ளார்.
இப்படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்ற நிலையில் வரும் அக்டோபர் 31ம் தேதி வெளியாக உள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
















