ஸ்பைடர்மேன் படபடிப்பின் போது நடிகர் டாம் ஹாலண்ட் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
ஸ்பைடர்மேன் Brand New Day படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் ஹாலிவுட் நடிகரான டாம் ஹாலண்ட் ஹீரோவாக நடிக்க, டெஸ்டின் டேனியல் இப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், படப்பிடிப்பில் நடிகர் டாம் ஹாலண்ட் விபத்தில் சிக்கியுள்ளார். இதில் அவருக்குத் தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.
இதனால் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சண்டைக் காட்சியின் போது ஸ்டண்ட் காட்சியில் இந்தக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.