மத்திய சீனாவின் ஹுபெய் மாகாண எல்லையில் 120 மில்லியின் கன மீட்டர் கொண்ட கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு வயல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஹூபெய் மாகாணத்தில் சில ஆண்டுகளாகச் சீன தேசிய பெட்ரோலிய நிறுவனம், கச்சா எண்ணெய் வயல்களைக் கண்டறிய 50க்கும் மேற்பட்ட சோதனைக் கிணறுகளைத் தோண்டி ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்நிலையில் ஹோங்ஸிங் பகுதியில் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டது. சுமார் 120 மில்லியன் கன மீட்டர் அளவு கொண்ட கச்சா எண்ணெய் இருக்கும் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் தெற்கு சீனக் கடல் பகுதியில் ஹூயிஷா என்ற இடத்தில் எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், புதிதாக மத்திய சீனா பகுதியிலும் கச்சா எண்ணெய் வயல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் சீனப் பெட்ரோகெமிக்கல் கார்ப்பரேஷன் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.