அம்பாசமுத்திரம் அருகே வளர்ப்பு நாய் 14 பேரை கடித்து குதறிய சம்பவம் தொடர்பாக, நாயின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள விக்கிரமசிங்கபுரத்தில் கிருஷ்ணன் என்பவர் நாய்களை வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், கடந்த 19ம் தேதி அவரது வளர்ப்பு நாய் 12 வயது சிறுவன், பெண்கள் உள்ளிட்ட 14 பேரை கடித்து குதறியது. இது குறித்த புகாரின் பேரில், கிருஷ்ணன் மீது விக்ரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.