மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே நியாய விலை கடையின் மேற்கூரைப் பூச்சு பெயர்ந்து விழுந்ததில் எடையாளர் காயமடைந்தார்.
கிடாரங்கொண்டான் ஊராட்சிக்குட்பட்ட பொன்செய் கிராமத்தில் நியாய விலை கடை செயல்பட்டு வருகிறது.
இதில் சித்ரா என்பவர் விற்பனையாளராகவும், சௌரிராஜன் என்பவர் எடையாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.
இருவரும் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கடையின் மேற்கூரை சிமெண்ட் பூச்சு பெயர்ந்து எடையாளர் தலையில் விழுந்தது.
இதில் காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் கட்டடம் முறையாகப் பராமரிக்கப்படாததே விபத்துக்குக் காரணமென குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
















