காலிஸ்தான் தீவிரவாதி குர்பத்வந்த் பன்னுனின் வலது கையாகச் செயல்பட்ட நபரைக் கனடா போலீசார் கைது செய்துள்ளனர்.
காலிஸ்தான் தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாரின் மரணத்திற்குப் பிறகு அமெரிக்காவை தளமாக கொண்டு செயல்படும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் முக்கிய பொறுப்பில் உள்ளார் குர்பத்வந்த் பன்னுன்.
காலிஸ்தான் பிரிவினைவாதியான இவர், கடந்தாண்டு நவம்பர் ஒன்று முதல் 19 ஆம் தேதி வரை ஏர் இந்தியா விமானங்களில் பயணிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சீக்கிய இனப் படுகொலையின் நினைவு நாளை முன்னிட்டு விமானங்கள் தாக்கப்படலாம் என அவர்க் கூறியிருந்தார். முன்னதாக 2020-ல் உள்துறை அமைச்சகம் அவரைத் தீவிரவாதியாக அறிவித்ததுடன் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பையும் இந்தியாவில் தடைச் செய்தது.
இந்நிலையில் குர்பத்வந்த் பன்னுனின் நெருங்கிய உதவியாளராக இருந்த காலிஸ்தானி பயங்கரவாதி இந்தர்ஜித் சிங் கோசலை, துப்பாக்கி வைத்திருந்ததாகக் கனடா காவல்துறைக் கைது செய்துள்ளது.
சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் இந்திய தலைவராகக் கோசல் செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.