சீனாவில் விளக்குத் திருவிழா களைகட்டியுள்ளது. குளிர்காலத்தையொட்டி நடத்தப்படும் விளக்குத் திருவிழா பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
2-வது ஷாங்காய் சர்வதேச விளக்கு திருவிழா கடந்த 19-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.
30 நாட்கள வரை நடைபெறும் இந்த விழாவில் 19 நாடுகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட ஒளியியல் கலைஞர்களின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
குறிப்பாக ஏஐ என்றழைக்கப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் கலை ஒளியமைப்பு, 3D முப்பரிமாண ஒளி விளக்குகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
திருப்பதி ஏழுமலையானுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 தங்க டாலர்கள், 2 வெள்ளி தட்டுகளை ஸ்ரீ சமஸ்தான் ஜோகர்னப் பார்ட்டகலி மடாதிபதி காணிக்கையாக வழங்கினார்.
முன்னதாகக் கோயிலுக்கு வருகைத் தந்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காணிக்கையை வழங்கினார்.