அமெரிக்காவின் டெக்சாஸில் சர்வதேச பலூன் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.
ஆண்டுதோறும் செப்டம்பர் மாதத்தில் டெக்சாஸ் மாகாணத்தின் பிளானோ நகரில் ஓக் பாயிண்ட் பூங்கா மற்றும் நேச்சர் ப்ரிசர்வில் வெப்ப காற்று பலூன் திருவிழா நடத்தப்படுகிறது.
மாலை நேரத்தில் வெப்ப காற்று பலூனுடன், வாணவேடிக்கை, இசை நிகழ்வு, பாராசூட் குழு கண்காட்சி உள்ளிட்டவை நடத்தப்பட்டன.
இந்த விழாவில் டைகர், பேபி மான்ஸ்டர், சீட்டா, மிக்கி மவுஸ், எலிபண்ட் உள்ளிட்ட பல்வேறு விதமான உருவம் பொறித்த நூற்றுக்கும் மேற்பட்ட பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு உற்சாகமாகப் பொழுதை கழித்தனர்.