திருப்பதி ஏழுமலையானுக்கு 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 15 தங்க டாலர்கள், 2 வெள்ளி தட்டுகளை ஸ்ரீ சமஸ்தான் ஜோகர்னப் பார்ட்டகலி மடாதிபதி காணிக்கையாக வழங்கினார்.
முன்னதாகக் கோயிலுக்கு வருகைத் தந்த அவர், ஏழுமலையானை மனமுருகி வழிபட்டார். தொடர்ந்து தேவஸ்தான அதிகாரிகளிடம் அவர் 1 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காணிக்கையை வழங்கினார்.