மதுரை மாவட்டம் மேலூர் அருகே சிப்காட் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கைதான 24 பேரை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கல்லங்காடு பகுதியில் சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் தொழிற்பேட்டை அமைக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இப்பகுதியில் தொழிற்பேட்டை அமைக்கப்பட்டால் விவசாயம் பாதிக்கப்படும் எனக் கூறி திட்டத்திற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்தநிலையில் நில அளவீடு செய்யும் பணிக்காகக் கல்லங்காடு கிராமத்திற்கு வருவாய்த்துறை அதிகாரிகள் வந்தனர்.
இதனைக் கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்ட 24 பேரைப் போலீசார் கைது செய்தனர். திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்ட அவர்களுக்குக் காவல்துறையினர் உணவு மற்றும் தண்ணீர் கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் மயக்கமடைந்த பெண்களை ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.