தஞ்சைப் பெரிய கோயிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஸ்ரீபெரியநாயகி அம்மன், மனோன்மணி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நவராத்திரியின் முதல் நாளான நேற்று, ஸ்ரீபெரியநாயகி அம்மனுக்கு மனோன்மணி அலங்காரம் செய்யப்பட்டுத் தீபாராதனை காட்டப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அதைத் தொடர்ந்து, நந்தி மண்டபத்தில் பரத நாட்டிய கலைஞர்களின் பரதநாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. இதை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.