ஆந்திராவின் துணை முதல்வர் பவன் கல்யாண் நடிப்பில் உருவாகியிருக்கும் ஒஜி திரைப்படத்தின் புரொமோஷன் விழா ஹைதராபாத்தில் நடைபெற்றது.
இந்தப் படத்துக்கான புரொமோஷன் நிகழ்ச்சி ஹைதராபாத் எல்பி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் பவன் கல்யாண் கலந்துகொண்டார்.
அப்போது பவன் கல்யாண், கையில் இருந்த வாளை சுழற்றி கொண்டே மேடைக்கு வந்தார். அதனால் பின்னால் வந்த பவுன்சர்களில் ஒருவர் மீது வாள் பட்டது. அந்தக் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.