சென்னை பாடியில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சிவன் கோயிலில் முதன் முறையாக வைக்கப்பட்டுள்ள நவராத்திரி கொலுவை ஏராளமானோர் கண்டு ரசித்தனர்.
நவராத்திரியை முன்னிட்டு சென்னை பாடி திருவல்லீஸ்வரர் சிவன் கோயிலில் அறநிலையத்துறைச் சார்பில் முதன் முறையாகக் கொலு பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கொலுவில் தசாவதாரம், அஷ்ட லட்சுமிகள், திருக்கல்யாணம், ஆண்டாள் பெருமாள், பழனி முருகன், சிவன் பார்வதி, விஷ்ணு, காளி அவதாரம், பண்டைய காலங்களில் நாம் பின்பற்றிய நடைமுறைகள் உள்ளிட்ட பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கோயிலில் வைக்கப்பட்டிருந்த கொலு பொம்மைகளைக் கண்டு ரசித்ததுடன் செல்போனில் புகைப்படம் எடுத்துப் பக்தர்கள் மகிழ்ந்தனர். மேலும், கோயில் வளாகத்தில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியையும் பொதுமக்கள் கண்டு களித்தனர்.
பரதநாட்டிய நிகழ்ச்சியில் பங்கேற்ற சிறுமிகளுக்குக் கோயில் அறங்காவலர் குழு தலைவர் பரிசுகளை வழங்கிக் கௌரவப்படுத்தினார்.