சேலம் கன்னங்குறிச்சியில் மின்வாரிய ஒப்பந்த ஊழியரை அடித்துக் கொன்று ஆற்றில் வீசிய ரவுடி உட்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சுக்கம்பட்டி அருகே உள்ள சின்னனூரைச் சேர்ந்த சதீஷ்குமார், மின்வாரியத்தில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தார்.
கடந்த 18ஆம் தேதி நண்பர்களுடன் சேர்ந்து மது போதையில் ஆம்னி வேனை மறித்து தகராறில் ஈடுபட்டார். அப்போது, வாகனத்தில் இருந்த ரவுடி மணிகண்டன் மற்றும் அவரது கூட்டாளிகள், சதீஷ்குமாரை அடித்த கொன்று உடலை பவானி ஆற்றில் வீசிச் சென்றனர்.
சம்பவத்தன்று சதீஷ்குமாரை அவர்கள் தங்களது வாகனத்தில் ஏற்றிச்சென்றது சிசிடிவி மூலம் தெரியவந்தது. இதையடுத்து, ரவுடி மணிகண்டன் உட்பட 4 பேரைப் போலீசார் கைது செய்தனர்.