இட்லி கடை படத்திற்கு யு சான்றிதழை தணிக்கை குழு வழங்கியுள்ளது. தனுஷ் இயக்கத்தில் 4-வது படமாக இட்லி கடை உருவாகியுள்ளது.
இது அவரின் 52-வது திரைப்படமாகும். அக்டோபர் 1-ம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது. படத்திற்கான புரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது.
இதன் டிரெயிலர் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு யு சான்றிதழைத் தணிக்கை குழு வழங்கியுள்ளதாகப் படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.