டெல்லியில் வழிப்பறி கொள்ளையனும், மாயா கும்பலின் முக்கிய குற்றவாளியுமான சாகர் என்ற இளைஞரை போலீசார் சுட்டுப் பிடித்தனர்.
சரிதா விஹார் மேம்பாலத்தில் குற்றவாளிக்கும், போலீசாருக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் குற்றவாளியின் காலில் குண்டு பாய்ந்து காயம் ஏற்பட்டது.
பின்னர் அந்த இளைஞரை கைதுசெய்த போலீசார் அவனை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் குற்றவாளியிடம் இருந்து ஒரு பிஸ்டல், தோட்டாக்கள் உள்ளிட்டவைப் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.