டுரியன் பழத்தை விமானத்தில் கொண்டு செல்ல அனுமதி மறுத்ததால் ஒரு குடும்பம் அவசர அவசரமாக 5 கிலோ பழத்தைச் சாப்பிட்ட சம்பவம் தாய்லாந்தில் அரங்கேறியுள்ளது.
சீனாவைச் சேர்ந்த லி என்பவரும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்துக்குச் சுற்றுலா சென்றிருந்தனர். இதையடுத்துச் சொந்த ஊர் திரும்பும் நேரத்தில் லி-யின் தந்தை, ஆசை ஆசையாக ஐந்தரை கிலோ துரியன் பழத்தை வாங்கியுள்ளார்.
ஆனால் விமானத்தில் துரியன் பழத்தை எடுத்துச் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி சியாங் மாய் விமான நிலையத்தில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனால் அதிர்ச்சி அடைந்த லி குடும்பத்தினர் பழத்தை வீணாக்க விரும்பாமல் 30 நிமிடங்களில் ஐந்தரைக் கிலோ துரியன் பழத்தையும் அவசர அவசரமாகச் சாப்பிட்டு முடித்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.