பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய விமான நிலையங்கள் மீதான சைபர் தாக்குதலால் விமான சேவை மூன்றாவது நாளாகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.
காலின்ஸ் ஏரோஸ்பேஸ் தளத்தின் மீது கடந்த 19-ம் தேதி சைபர் தாக்குதல் நடந்தது. இதனால் சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்கள் விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் விமான சேவைப் பாதிக்கப்பட்டதால் பயணிகள் கடும் சிரமமடைந்தனர்.