விசித்திரமான அறிவியல் கண்டுபிடிப்புக்கான இக் (IGE) நோபல் பரிசை இந்திய பொறியாளர்கள் இருவர் வென்றுள்ளனர்.
இக் நோபல் பரிசுகள் என்பது முதலில் மக்களைச் சிரிக்க வைக்கும், பின்னர் சிந்திக்க வைக்கும் ஆராய்ச்சியை கௌரவிக்கும் வினோதமான அறிவியல் விருதுகள் ஆகும். இந்த விருது 1991ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025ம் ஆண்டிற்கான விருது வழங்கும் விழா அமெரிக்காவின் மாசசூசெட்ஸில் உள்ள பாஸ்டன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.
இதில் காலணிகளுக்குள் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களைக் கொல்லும் புற ஊதா ஒளிவிளக்குகள் பொருத்தப்பட்ட ஷூ ரேக்கை உருவாக்கியதற்காக உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஷிவ் நாடார் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர்களான விகாஷ் குமார் மற்றும் சர்தக் மிட்டல் ஆகியோருக்கு விருது வழங்கிக் கவுரவிக்கப்பட்டது.