சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ஒரே நாளில் ஆயிரத்து 680 ரூபாய் அதிகரித்து 85 ஆயிரத்து 120 ரூபாய் என்ற புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
தங்கத்தின் மீதான முதலீடு தொடர்ந்து அதிகரித்து வருவதால் அதன் விலை ஜெட் வேகத்தில் உயர்ந்து வருகிறது.
நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை இரண்டு முறை அதிகரித்து சவரன் 83 ஆயிரம் ரூபாயை தாண்டியது. அதேபோல் இன்றும் தங்கத்தின் விலை இரண்டாவது முறையாக உயர்ந்துள்ளது.
அதன்படி ஆபரண தங்கத்தின் விலை கிராமிற்கு 140 ரூபாய் அதிகரித்து 10 ஆயிரத்து 640 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ஆயிரத்து 680 ரூபாய் அதிகரித்து 85 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.