சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு - உதவிக்கரம் நீட்டும் இந்தியா!
Sep 10, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சீனாவை நம்பியதால் மோசம் : திவாலாகும் மாலத்தீவு – உதவிக்கரம் நீட்டும் இந்தியா!

Murugesan M by Murugesan M
Sep 23, 2025, 03:35 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாகிஸ்தான், இலங்கை வரிசையில், கடுமையான பொருளாதார நெருக்கடியில் மாலத்தீவு சிக்கியுள்ளது. கிட்டத்தட்ட திவால் நிலைக்குச் சென்றுள்ள அந்நாட்டுக்கு இந்தியா உதவிக் கரம் நீட்டியுள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

115 சதுர மைல் கிலோ மீட்டர்  பரப்பளவு கொண்ட மாலத்தீவு 1,200 தீவுகளை உள்ளடக்கிய மிகச்சிறிய நாடு ஆகும். 1965ஆம் ஆண்டு பிரிட்டனிடமிருந்து முழுமையாகச் சுதந்திரம் பெற்ற மாலத்தீவு அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் இஸ்லாமியக் குடியரசாக மாறியது. 2008ஆம் ஆண்டு, நாட்டின் அரசு மதமாக இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டது.

அப்போது இருந்து,நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கின்றன. இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்த மாலத்தீவு,சீனாவுடன் பெருமளவில் கடன் வாங்கியுள்ளது. போதாதென்று, இந்தியாவும் அந்நாட்டுக்கு 5000 கோடி ரூபாய்க்கும் மேல் கடன் வழங்கியுள்ளது.

மாலத்தீவில் வெளிநாட்டுக் கடன் நாளுக்கு நாள் கடுமையாக உயர்ந்து வருகிறது. இந்த ஆண்டில் 600 மில்லியன் டாலர்கள் மற்றும் அடுத்த ஆண்டில் 1 பில்லியன் டாலர்கள் வெளிநாட்டுக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயத்தில் மாலத்தீவு உள்ளது.

முன்னதாக, 2019ம் ஆண்டு முதல் கரு​வூல பத்​திரங்​களை வாங்​கு​வதன் மூலம் ஆண்​டு தோறும் மாலத்​தீவுக்குப் பல கோடி ரூபாய் அளவிலான வட்டி இல்லா நிதி உதவியைத் தொடர்ச்​சி​யாக இந்தியா வழங்கி வரு​கிறது.

கடந்த ஆண்டு, இந்தியாவுக்கு வருகைப் புரிந்த மாலத்தீவு அதிபர், பிரதமர் மோடியைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, ஏற்கெனவே கடன்பத்திரங்கள் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்த 840 கோடி ரூபாய் கடனைத் திருப்பி செலுத்தும் காலம் நீட்டிக்கப் பட்டது.

மாலத்தீவின் அந்நியச் செலாவணி இருப்பு வரலாறு காணாத அளவுக்குக் குறைந்துள்ளது. ஆகஸ்ட் மாத இறுதிக்குள் 18.8 மில்லியன் அமெரிக்க டாலர் மட்டுமே உள்ளது. இது நாட்டின் ஒரு மாத இறக்குமதியை ஈடுகட்ட கூட போதாது என்று கணிக்கப் பட்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழலில் மீண்டும் இந்தியா, மாலத் தீவுக்கு உதவி செய்துள்ளது. கரு​வூலப் பத்​திரங்​களைத் திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலக்​கெடு முடிவடைந்​த நிலையில் மாலத்​தீவு அரசின் வேண்​டு​கோளின் பேரில், 50 மில்​லியன் அமெரிக்க டாலர் மதிப்​புள்ள கருவூல பத்​திரங்​களைத் திருப்​பிச் செலுத்​து​வதற்​கான காலக்​கெடுவை மேலும் ஓராண்டுக்கு இந்​தியா நீட்டித்து உள்ளது. நீட்டிக்கப்பட்ட இந்தக் காலகட்டத்தில் எந்த வட்டியும் வசூலிக்கப்படாது என்றும் இந்தியா அறிவித்துள்ளது.

ஏற்கெனவே இருதரப்பு பொருளாதார உறவுகளை வலுப்படுத்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டுள்ளன. மாலத் தீவின் அட்டு நகரில் இந்திய துணைத் தூதரகத்தையும், பெங்களூருவில் மாலத் தீவு துணைத் தூதரகத்தையும் திறக்க முடிவெடுக்கப் பட்டுள்ளது. மாலத் தீவில் ரூபே கார்டு சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், பள்ளிகள், சாலைகள், வீட்டு வசதிகள் வேளாண் பொருளாதார மண்டலம்,மீன் பதப்படுத்தும் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் மாலத் தீவுக்கு இந்தியா உதவுகிறது. பாதுகாப்புத் துறையில் கூட்டு ராணுவப் பயிற்சி மற்றும் இராணுவ ஒத்துழைப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. 28 தீவுகளின் கட்டுப்பாட்டை மாலத்தீவு இந்தியாவிடம் ஒப்படைத்துள்ளது.

திவால் நெருக்கடியால் இந்தியாவுடனான தனது அணுகுமுறையை மாற்றிய மாலத்தீவு அதிபர், சீனாவை ஓரங்கட்டிவிட்டு இந்தியாவுடன் நல்லுறவை மேம்படுத்த முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மாலத்தீவில் சீனாவின் வளர்ந்து வரும் நிதி இருப்பு சவாலுக்குத் திட்டமிட்ட சிறந்த வியூகத்தை இந்தியா முன்னெடுத்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.

Tags: பொருளாதார நெருக்கடியில் சீனாRelying on China is bad: Maldives is going bankrupt - India is extending a helping handதிவாலாகும் மாலத்தீவுIndiaபாகிஸ்தான்சீனாஇலங்கை
Share
Tweet
SendShare
Previous Post

பாரிமுனை கேசவ பெருமாள் கோயிலில் இருந்து திருப்பதிக்கு புறப்பட்ட திருக்குடை!

Next Post

புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை!

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

Load More

அண்மைச் செய்திகள்

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies