ப்ளூ ஸ்டார் படத்திற்காகச் சர்வதேச விருது வென்ற நடிகர் சாந்தனு, படக்குழுவுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
கனடா சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் ‘ப்ளூ ஸ்டார்’ படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதை நடிகர் சாந்தனு பெற்றார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ப்ளூ ஸ்டார் படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதை வென்றது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், இந்தப் படம் தனக்கு ஒரு கதாபாத்திரத்தைவிட அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து தயாரிப்பாளர் மற்றும் படக்குழுவின் ஒவ்வொரு நபருக்கும் பார்வையாளர்களுக்கும் நன்றி என நடிகர் சாந்தனு நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.