இத்தாலியில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்தது.
பாலஸ்தீன அரசை இத்தாலி அங்கீகரிக்க மறுப்பதால், காசாவை ஆதரித்து யூனியன் சிண்டகேல் டி பேஸ் உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தன.
இதனால் பொது போக்குவரத்து முதல் பள்ளிகள் வரை அனைத்து துறைகளிலும் உள்ள பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டங்களால் நாடு முழுவதும் சாலைப் போக்குவரத்துகள் மற்றும் ரயில் சேவைகள் தடைசெய்யப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறி, காவல்துறைக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் உருவானது. இதனைத் தொடர்ந்து இத்தாலி முழுவதும் பதற்றமான சூழல் நிலவுகிறது.