சென்னை கோடம்பாக்கத்தில் ஒரே இடத்தில் 4 முறைக்கு மேல் தோண்டப்பட்ட பள்ளத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
பாரதீஸ்வரர் இரண்டாவது தெருவில் பாதாள சாக்கடை பணிகளுக்காகப் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
இந்த இடத்தில் கடந்த ஆறு மாதங்களில் நான்காவது முறையாகப் பள்ளம் தோண்டப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் கனரக வாகனங்கள் அடிக்கடி சிக்கிக் கொள்வதாகவும் கடும் அவதியடைந்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.