பெரம்பலூர் அருகே களைக்கொல்லி மருந்தை தெளித்ததால் சுமார் 25 ஏக்கரில் பயரிடப்பட்ட மக்காச்சோளப் பயிர்கள் கருகி சேதமடைந்தன.
வேப்பந்தட்டையை அடுத்த VRSS-புரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் பலர் மக்காச்சோள பயிர் சாகுபடி செய்துள்ளனர்.
பயிர்களில் களைச் செடிகள் வளருவதால் அவர்கள் அங்குள் உள்ள கடையில் களைக்கொல்லி மருந்துகளை வாங்கி பயிர்களில் தெளித்துள்ளனர்.
ஒரு வாரத்தில் பயிர்கள் கருகி சேதமடைந்ததால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.இதுகுறித்து தகவலறிந்து வந்த வேளாண் அதிகாரிகள், மருந்தின் மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் சம்பந்தப்பட்ட மருந்துத் தயாரிப்பு நிறுவனம்மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.