தெலங்கானாவில் கொள்ளையர்கள் வீடு புகுந்து கொள்ளையடித்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
கம்மம் மாவட்டம், ஒய்.எஸ்.ஆர். காலனியில் ஆறு வீடுகளின் பூட்டை உடைத்து கொள்ளையர்கள் கைவரிசையை காட்டியதாகத் தெரிகிறது.
நகைகள், பணம் என லட்சக்கணக்கில் கொள்ளையடிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. நான்கு பேரின் முகங்களும் சிசிடிவி காட்சியில் பதிவாகியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பாகப் போலீசார் விசாரித்து வருகின்றனர்.