அமெரிக்கா, விரைவில் முழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தையும் பொருளாதார தடைகளால் தாக்கக்கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மீது தடை விதித்து நிர்வாக உத்தரவு ஒன்றை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த பிப்ரவரி மாதம் பிறப்பித்தார்.
அந்த உத்தரவில் அமெரிக்கா மற்றும் அதன் நெருங்கிய கூட்டணி நாடான இஸ்ரேல் மீது ஆதாரமற்ற பொய்யான குற்றச்சாட்டுகளைச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சுமத்துவதாகத் தெரிவித்தார்.
இந்த நிலையில், இஸ்ரேலிய போர் தொடர்பான சந்தேகத்திற்குரிய விசாரணைகளுக்குப் பழிவாங்கும் விதமாக, முழு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் எதிராக விரைவில் தடைகளை விதிக்க அமெரிக்கா பரிசீலித்து வருகிறது.