தாதா சாகேப் பால்கே விருதை முன்னணி நடிகர் மோகன்லால் பெற்றுக்கொண்டார்.
சினிமாவுக்கு மோகன் லால் ஆற்றிய பங்களிப்பைச் சிறப்பிக்கும் வகையில் அவருக்குத் தாதாசாகேப் பால்கே விருதை மத்திய அரசு அறிவித்தது.
இதனையடுத்து இன்று நடைபெற்ற தேசிய விருதுகள் விழாவில் மோகன் லாலுக்கு அவ்விருதினை குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கிக் கவுரவித்தார்.
மோகன் லால் இதற்கு முன்னர், பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷன் விருதுகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.