சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் பெற்றார்.
பார்க்கிங் படத்தில் நடித்ததற்காக நடிகர் எம்.எஸ்.பாஸ்கருக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.
இந்த விருதினை டெல்லியில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு வழங்கிக் கவுரவித்தார். மேலும், பார்க்கிங் படமானது சிறந்த தமிழ் படத்திற்கான விருதையும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான விருதையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அந்த விருதுகளைப் படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் ஆகியோர் பெற்றனர்.